கலியுகக் காக்கா நரிக்கதை



அன்புக் குழந்தைகளே,

உங்கள் எல்லோருக்கும் ஏமாந்த காகம் கதை தெரியும் இல்லையா? "காக்கா காக்கா, ஒரு பாட்டுப் பாடு என்று தந்திரமான குள்ளநரி கேட்க, கவனமில்லாமல் வாயில் வடை இருப்பது தெரியாமல் அசட்டுக் காகம் வாயைத் திறந்து பாட, வடையும் கீழே விழுந்து விட, நரியும் ஏமாற்றி வடையைப் பெற்றது இல்லையா? இப்போது இந்த சாதுர்யமாகத் தன் மூளையை உபயோகித்த காகத்தின் கதையைப் பார்ப்போமா? பின் ராகம் போட்டு இசையுடன் பாடுங்கள் ..........

அம்மாக் காகம் அழைத்தது,
காக்கா கா,,, கா,,,, கா,,,,
பறந்து வந்தது குழந்தைக் காகம்
கரைந்தது கா,,,, கா,,,, கா,,,,,,,

அம்மா சொல்லியது அன்புடன்,
எமாற்றாதே நீ ஒருவரையும்,
ஏமாறாதே, இரு கவனமுடன்,
நீ செய்யும் வேலை எல்லாம்
புத்திக் கூர்மையுடன் இருக்கட்டும்

காகா,,,,, காக்கா,,,,,, கா,,,,,,,, சரியம்மா."
மகிழ்ந்து போனது குஞ்சுக் காக்கை
ஒரு தின் பண்டக் கடை மேல் பறந்தது
கடையுடன் வடையையும் பார்த்தது
வடை வாங்க ஒரு பையன் வந்தான்
கையில் வாங்கி வடையைப் பார்த்தான்
வடை தவறிக் கீழே விழவும்

குஞ்சுக் காக்கா கொத்திப் பறந்தது
மேலே மரத்தின் கிளையில் அமர
எல்லாம் ரசித்த நரி ஒன்று வர
வடையை அடைய முயன்றது.
காக்கா காக்கா, கீழே பார்
நீ அழகாய்ப் பாட்டுப் பாடுவாயே,
ஒன்று பாடிக் காட்டுவாயா?"

"ஓ, பாடுவேனே" என்றபடி
வாயின் வடையைக் காலில் சொறுகி
கா,,, கா,," என்றும் பாட
நரியும் ஏமாந்து திரும்பியது,,,,,,

அன்புடன் உங்கள் அம்மம்மா விசாலம்



குழந்தைகள் தினம்

குழந்தைகளுக்கு ஒரு தினம்

எங்களுக்கும் குதூகலம்

எங்கு பார்த்தாலும் போட்டிகள்,

ஜெயித்தால் நிறையப் பரிசுகள்,

கை நிறைய சாக்கலேட்டு,

பள்ளியில் அளிக்கும் பிஸ்கட்டு,

மாலை வந்தால் பொருட்காட்சி,

நடப்பது இன்று எங்கள் ஆட்சி;

"சாச்சா நேஹ்ருவின் பிறந்த நாள்,

எங்களுக்கு ஒரு சிறந்த நாள்,

அவர் கனவை நனவாக்குவோம்,

உங்கள் வாழ்த்துகளில் நீந்துவோம்.


பாட்டியின் பாட்டுக் கதைகள்



மழலைகளுக்குப் பாட்டியென்றால் உயிர். அதிலும் கதைகள் சொல்லி, பாட்டுப் பாடி அவர்களை மகிழ்விக்கும் பாட்டியென்றால் கேட்கவே வேண்டாம். இணையத்தின் மழலைகளுக்கென்றே ஒரு இணணையில்லா இணையப் பாட்டியாக அம்மம்மா விசாலம் அவர்கள் கிடைத்துள்ளார். இவர் குழந்தைகள் மீது அதீதமான அன்பு கொண்டவர். சிறந்த அறிவும் மிகுந்த அனுபவமும் கொண்ட இவர் குழந்ததைகளுக்கென்று கூறியுள்ள கதைகள் குழந்தைகள் மட்டுமின்றி அனைவரும் படித்து மகிழக்கூடியவை.

தீபாவளிப் பாட்டு

பாட்டி நல்ல பாட்டி, அன்பைப் பொழியும் பாட்டி,

தீபாவளிக் காலை என்னை எழுப்பி விட்ட பாட்டி,

சோம்பிப் படுத்த எனக்கு, பட்டாசு காட்டிய பாட்டி

தலையில் எண்ணெய் வைத்து விட்டு

பாட்டுப் பாடிய பாட்டி

கங்கா ஸ்னானம் ஆச்சு என்று பட்டுடை கொடுத்த பாட்டி

ஸ்லோகத்துடன் லட்சுமி பூஜை குபேர பூஜையுடன்

வயிறுக்கும் பூஜை

அன்பு கலந்த இனிப்புகள் அள்ளி வழங்கும் பாட்டி

முற்றம் முழுதும் விளக்கு வைத்து

மத்தாப்பு ஏற்றிக் கொடுத்த பாட்டி

அமெரிக்காவில் என் பெற்றோர் இருக்க

எனக்கு எல்லாம் நீ தான் பாட்டி.